திமுகவின் பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது.. அமைச்சர் S.P.வேலுமணி

கோவை, மார்ச்-22

வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமியை ஆதரித்து, நா.மூ.சுங்கம் பகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

அதிமுக ஆட்சியில் அனைத்துத்தரப்பு மக்களுக்குமான நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக ஆட்சியை குறைகூறி, பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது நிறைவேற்ற முடியாத பொய் வாக்குறுதிகளை கூறி, மக்களை ஏமாற்றி திமுகவினர் அதிக இடங்களைக் கைப்பற்றினார். ஆனால், திமுக எம்.பி.க்கள் மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை. அவர்கள்தொகுதி பக்கம் வருவதே இல்லை. தேர்தல் நேரத்தில் இவ்வாறு பொய் வாக்குறுதிகளைக் கூறி வெற்றிபெற்று, மக்களை ஏமாற்றுவதையே திமுக தலைவர் ஸ்டாலினும், அவரது கட்சியினரும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் திமுகவின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல், மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றும் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று சுண்டக்காமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்குசேகரித்தார். அப்போது அவர், அதிமுக அரசு மக்களுக்கு செய்துள்ள நன்மைகள்,நலத் திட்டங்களை விளக்கியும்,வெற்றி பெற்றால் நிறைவேற்றக்கூடிய திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.

முன்னதாக, கோவை, ராம்நகரில் நடந்த பா.ஜ.க., செயல்வீரர்கள் கூட்டத்தில், அமைச்சர் வேலுமணி பேசியதாவது:-

பா.ஜ., வேட்பாளருக்கு அ.தி.மு.க., தொண்டர்கள் விசுவாசமாக பணியாற்றுவர். சூழ்நிலை காரணமாக, கோவை தெற்கு பா.ஜ.,வுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. வாக்களித்த மக்களை ஏமாற்றாமல் மனசாட்சியுடன் வேலை செய்துள்ளோம்.அவற்றை மக்களுக்கு நினைவூட்ட வேண்டும். மக்களின் தேவைகளையே தேர்தல் அறிக்கையாக கொடுத்திருக்கிறோம். அதனால், 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும்.
எந்தக் காலத்திலும், ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது. சிறுபான்மையினருக்கு தி.மு.க., துரோகம் செய்துள்ளது. வானதி சீனிவாசனுக்கு, கமல்ஹாசன் ஒரு பொருட்டே அல்ல. கோவை தெற்கு தொகுதியில், காங்கிரஸ் – பா.ஜ., இடையே தான் போட்டி. கோவை மாவட்டம் அ.தி.மு.க., கோட்டை; ஒரு செங்கல்லை கூட தி.மு.க.,வினர் எடுத்து விடாத அளவுக்கு உழைக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

வானதி சீனிவாசன் வெற்றி பெற வாழ்த்தி, வெள்ளி வீர வாளை, அமைச்சர் பரிசாக அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *