திமுகவுக்கு வாக்களிப்பது எரியும் கொள்ளியை எடுத்து தலையில் வைத்துக் கொள்வதற்கு சமம்.. ராமதாஸ்

ஜெயங்கொண்டம், மார்ச்-22

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் சட்டப்பேரவைத் தொகு தியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வழக்க றிஞர் கே.பாலுவை ஆதரித்து, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் நான்கு சாலை மற்றும் தா.பழூர் கடைவீதியில் ராமதாஸ் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 4 ஆண்டுகால முதல்வர் பழனிசாமியின் ஆட்சியில் குறை சொல்ல ஒன்றும் இல்லை. மீண்டும் பழனிசாமி தலைமை யில் தமிழகத்தில் ஆட்சி தொடர அனைவரும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். திமுக வை நம்பி வாக்களித்தால் எரியும் கொள்ளியை எடுத்து தலையில் வைத்துக் கொள்வதற்கு சமம். தற்போது நடை பெற்று வரும் ஆட்சியில் எந்த தொழிலாக இருந்தாலும் அச்சமின்றி செய்யலாம். பிரியாணி கடை, பியூட்டி பார்லர் உள்ளிட்ட கடைகளில் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். நாம் வெளிநாடு சென்று விட்டு திரும்பி வருவதற்குள் நமது நிலங்களை திமுகவினர் பட்டா போட்டு விற்று விடுவார்கள்.

விவசாயிகளுக்காக ஏராளமான திட்டங்களை எங்களது கூட்டணி தயார் செய்து வைத்துள்ளது. தற்போது விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். பாமக வேட்பாளரை வெற்றி பெறச்செய்தால், ஜெயங்கொண்டத்தில் புதை சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். அரசு மருத்து வமனை தரம் உயர்த்தப்படும். பொன்னேரி தூர் வாரப்படும். கங்கைகொண்ட சோழபுரம் சுற்றுலாதலம் மேம்படுத்தப்படும். சுத்தமல்லியிலிருந்து பொன்னே ரிக்கு தண்ணீர் கொண்டு வரப்படும். அனல்மின் திட்டத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு தற்போதுள்ள சந்தை மதிப்பு வழங்கப்படும். முந்திரிபருப்பு சிறப்பு பொருளாதார மண்டலம், உடையார்பாளையத்தில் பட்டுப்பூங்கா, கும்பகோணம் – ஜெயங்கொண்டம் வழியாக அரியலூருக்கு ரயில் பாதை அமைக்கப்படும். எனவே, பாமக வேட்பாளர் பாலுவுக்கு வாக்களியுங்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *