விக்ரம் லேண்டரை நிச்சயம் நிலவில் தரையிறக்குவோம்-சிவன்

புதுடெல்லி, நவம்பர்-02

சந்திரயான்-2 திட்டத்தின் மூலம் நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் நிச்சயம் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் ஐ.ஐ.டி.யின் 50-வது பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் கே. சிவன் கலந்துகொண்டார். அப்போது, நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்க இஸ்ரோ மீண்டும் முயற்சி செய்யுமா என்று ஊடகங்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன்: நிச்சயமாக. விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கான தொழில்நுட்பத்தை செயல்முறையில் செய்து பார்க்க வேண்டும். நாங்கள் விக்ரம் லேண்டரை தரையிறக்குவது தொடர்பான திட்டத்தில் பணியாற்றி வருகிறோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *