பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா…!சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை எடுத்து கொண்ட 2 நாளில் பாதிப்பு உறுதி..!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமாபாத், மார்ச்-20

பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான்கான், கடந்த 2018 இல் பிரதமராக தேர்வாகி இருந்தார். இந்நிலையில் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இம்ரான் கான், வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்ட இரண்டு தினங்களில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் எடுத்துக் கொண்ட கொரோனா தடுப்பூசி சீனாவின் சினோபார்ம். தற்போது பிரதமர் தன்னை வீட்டிலேயே தனிமை படுத்திக் கொண்டிருப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *