இங்க ரவுடித்தனம் பண்ண முடியாது.. திமுகவை எச்சரித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி..!!

கோவை, மார்ச்-19

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட கரடிமடை பகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி, அம்மா அரசின் வளர்ச்சி திட்டங்களையும், தாய்குலங்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள கழகத்தின் தேர்தல் அறிக்கையை பொதுமக்களிடம் தெரிவித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ஐபேக் நிறுவனத்தினர் ரவுடிகள், குண்டர்கள் என சுமார் 3 ஆயிரம் பேரை தொண்டாமுத்தூரில் களமிறக்கியுள்ளனர். அதிமுகவினரிடம் வம்பிழுத்து, பிரச்சினைகளை உருவாக்கி, தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கிறது.எனவே, அதிமுகவினர் பொறுமையாக இருக்க வேண்டும். குறுக்குவழியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவதை தடுத்தது, இரட்டை இலையை மீட்டது நான்தான் என்பதால், ஸ்டாலின் என் மீது கோபத்தில் உள்ளார். சிறுபான்மையினர் பாதுகாப்பில் அதிமுக உறுதியாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *