மகாராஷ்டிராவில் மார்ச் 31 வரை தியேட்டர்கள், தனியார் அலுவலகங்கள் 50%-உடன் இயக்க மாநில அரசு உத்தரவு.!

மும்பை, மார்ச்-19

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து தியேட்டர்கள், ஆடிட்டோரியங்கள் மற்றும் அலுவலகங்கள் மார்ச் 31 வரை 50 சதவீதத்துடன் மட்டுமே இயங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தியேட்டர்கள், ஆடிட்டோரியங்கள் மற்றும் அலுவலகங்களில் அனுமதிக்க வேண்டும் என்றும் கிருமிநாசினி, முகக்கவசம், சமூக இடைவெளி கண்டிப்பாக கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து தனியார் அலுவலகங்களும் 50% திறனில் செயல்பட வேண்டும். உற்பத்தித் தளத்தில் பராமரிக்கும் நோக்கத்திற்காக சமூக இடைவெளியுடன் உள்ளூர் அதிகாரிகள் ஒப்புதல் அளித்தபடி உற்பத்தி அலகுகள் பணி மாற்றங்களை அதிகரிக்க அனுமதிக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *