வேட்பு மனுத்தாக்கல் முடிந்த பின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட என்.ஆர்.காங்கிரஸ்..!

வேட்பு மனுத்தாக்கல் முடிந்த பிறகு வேட்பாளர் பட்டியலை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி, மார்ச்-19

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதியில் போட்டியிடுகிறது. ஆனால், வேட்பாளர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்த பின் , என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ரங்கசாமி வெளியிட்டுள்ளார்.

அதிகாரபூர்வ வேட்பாளர் விவரம்:

தட்டாஞ்சாவடி, ஏனாம் – ரங்கசாமி, திருபுவனை – கோபிகா, மங்கலம் – ஜெயகுமார், உழவர்கரை – பன்னீர்செல்வம், கதிர்காமம் – ரமேஷ், இந்திராநகர் – ஆறுமுகம், ராஜ்பவன் – லட்சுமி நாராயணன், அரியாங்குப்பம் – தட்சிணாமூர்த்தி, ஏம்பலம் – லட்சுமி காந்தன், நெட்டபாக்கம் – ராஜவேலு, பாகூர் – தனவேலு, நெடுங்காடு – சந்திர பிரியங்கா, காரைக்கால் வடக்கு – திருமுருகன், மாஹே – அப்துல் ரகுமான்.

தேர்தலின்போது மனுத்தாக்கல் முடித்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஒரே கட்சி என்.ஆர்.காங்கிரஸ்தான் என்பது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *