பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து ஒடுக்க வேண்டும்- ராஜ்நாத் சிங்

தாஷ்கண்ட், நவம்பர்-02

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து ஒடுக்க வேண்டும் என உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டார்

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.

மாநாட்டில் அவர் பேசியதாவது:- பயங்கரவாத தாக்குதலால், வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. பயங்கரவாதம் சமூகங்களை தொடர்ந்து சீர்குலைக்கிறது. எனவே, எந்தவித இரட்டை கருத்துகளும் இன்றி, நமது வளர்ச்சியை மறைமுகமாக பாதிக்கும் பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து ஒடுக்க வேண்டும்.

நட்பு நாடுகள் எளிதில் தொழில் தொடங்குவதற்கும் முதலீடு செய்வதற்கும் ஏற்ற சுமூகமான பொருளாதார சூழலை இந்தியா வழங்குவதற்கு தயாராக உள்ளது. இந்தியா தனது லட்சிய திட்டமான மேக் இன் இந்தியா திட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் உள்ள கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *