குஷ்புவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

குஷ்புவின் வேட்புமனுவில் அவருடைய சொத்து குறித்த முழு தகவல்களும் கிடைத்துள்ளது.

சென்னை, மார்ச்-19

ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு நேற்று தனது வேட்பு மனுவைத்தாக்கல் செய்தார். அதனுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பிரமாணப் பத்திரத்தில், தன் கையிருப்பாக ரூ.2.15 லட்சம் ரொக்கம் இருப்பதாகவும், 8.55 கிலோ தங்க நகைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தங்க நகைகளின் மதிப்பு ரூ.3,42,00,000 (ரூ.3.42 கோடி) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, 75 கிலோ வெள்ளிப் பொருள்கள் இருப்பதாகவும், அதன் மதிப்பு ரூ.46.80 லட்சம் என்றும் கூறப்பட்டுள்ளது.

குஷ்புவின் பிரமாணப் பத்திரத்தைக் காண..
மொத்தமாக தன்னிடம் இருக்கும் அசையும் சொத்து மதிப்பு ரூ.4,55,45,693 என்றும், தனது கணவர் சுந்தரிடம் இருக்கும் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.1,83,98,058 என்றும் தெரிவித்துள்ளார்.

குஷ்பு பெயரில் இருக்கும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.5,28,65,842 என்றும், கணவர் சுந்தர் சி.யின் பெயரில் இருக்கும் அசையா சொத்துகளின் மதிப்பு ரு.13,75,94,000 என்றும் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், குஷ்புவுக்கு ரூ.3.45 கோடி கடனும், கணவர் சுந்தருக்கு ரூ.5.55 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை குஷ்புவின் ஆண்டு வருமானம் ரூ.46,24,630 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகையும், பாஜக வேட்பாளருமான குஷ்பு எட்டாவது வரை படித்திருப்பதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *