தோல்வி என்ற வார்த்தையே எனது அகராதியில் இல்லை.. ரஜினி ஆதரவு எனக்குத்தான் – குஷ்பு அதிரடி

சென்னை, மார்ச்-18

பாரதிய ஜனதா கட்சியில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு, வேட்புமனு தாக்கல் செய்தார். சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் வள்ளுவர் கோட்டத்தில் இருந்து புறப்பட்ட அவர், நுங்கம்பாக்கம் மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தடைந்தார்.
மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு, மேளதாளம் முழங்க ஊர்வலம் களைகட்டியது. வேட்புமனுதாக்கலுக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, சிறுபான்மையினர் ஓட்டு பாஜகவுக்கு நிச்சயம் கிடைக்கும். சிறுபான்மையின மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறுவது எதிர்க்கட்சிகளின் போலியான பிரச்சாரம். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எந்தக் குறையும் வைக்கவில்லை. சின்ன அடிப்படைப் பிரச்சினைகள்தான் மக்களிடம் உள்ளன. பிரச்சினைகள் தீர நடவடிக்கை எடுக்கப்படும் தோல்வி என்ற வார்த்தையே தமது அகராதியில் இல்லை என கூறினார்.

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவு கேட்கவில்லை என்றாலும், அவர் தனக்கே ஆதரவு அளிப்பார் என நம்புவதாகவும், பாஜக வேட்பாளரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *