சாவிலும் வெள்ளாமை பார்க்கும் அரசியல்வாதி ஸ்டாலின் – ராஜேந்திர பாலாஜி கடும் தாக்கு

மதுரை, நவம்பர்-02

சாவிலும் வெள்ளாமை பார்க்கும் அரசியல்வாதியாகவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மக்கள் பார்ப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது: உள்ளாட்சித் தேர்தல் நடந்தால், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறார். அவர் பேசுவது என்னவென்று அவருக்கே தெரியவில்லை என்பதுதான் இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. எந்த தேர்தல் நடந்தாலும் ஆட்சி மாற்றம் வராது. ஸ்டாலினுக்கு ஏமாற்றம்தான் வரும்.

சுஜித் விஷயத்தை முழுக்க முழுக்க அரசியல் ஆக்கியது ஸ்டாலின்தான். இந்த மாதிரி ஒரு விஷயத்தில் கூட அவர் ஆதாயம் தேடப் பார்த்திருக்கிறார். சாவிலும் வெள்ளாமை பார்க்கும் அரசியல்வாதி ஸ்டாலின், திமுக ஆட்சிக் காலத்திலும் இது போன்ற பல இறப்புகள் நடந்திருக்கின்றன. அது பற்றியெல்லாம் பேசாமல் வாய்மூடி இருந்துவிட்டு, இப்போது அதிமுக அரசை அவர் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *