பொய்யான வாக்குறுதிகள் தருவதே திமுகவுக்கு பிழைப்பு.. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

கோவை, மார்ச்-18

கோவை ஆர்.எஸ்.புரத்தில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, கட்சி செயல்வீரர்களுடன் உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக, கோவை வடவள்ளி பகுதியில் வடக்கு சட்டமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம், மற்றும் செயல்வீரர்கள், வீராங்கணைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேசிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள், ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது ;-

பொள்ளாச்சியில், அரசியல் ஆதாயத்துக்காக, பாலியல் சம்பவத்தில் பொய்யான குற்றச்சாட்டை கூறி, தி.மு.க.,வினர், பொள்ளாச்சிக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றனர். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க, அ.தி.மு.க., அரசு தயாராக உள்ளது. எம்.பி., தேர்தலில் ஓட்டுக்காக, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை, அரசியலாக்கினர். தற்போது சட்டசபை தேர்தலுக்கும், அதே பாணியை கடைபிடிக்கின்றனர்.தி.மு.க.,வினர், ஒவ்வொரு தொகுதியிலும், வடமாநில குழுவினரை இறக்கி, சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவதையே வேலையாக கொண்டுள்ளனர். இதையெல்லாம் முறியடித்து, கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை. தமிழகத்தில் தி.மு.க.வை சேர்ந்த 37 எம்.பி.க்கள் வெற்றி பெற்றார்கள். அவர்களால் எந்த திட்டத்தையாவது நிறைவேற்ற முடிந்ததா? எனவே தி.மு.க.வினரின் பொய்யான வாக்குறுதிகளை நம்பாமல் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றிப் பெற செய்யுங்கள்.

தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்தது திமுக, கட்சதீவு, காவிரி நீர், பிரச்சினை என்று அனைத்தயும் விடுக்கொடுத்தது, அதிமுக அனைத்தையும் மீட்டுக்கொண்டு இருக்கின்றது. கொரானா காலத்தில் மக்களை நேரில் சந்தித்து உதவியது எடப்பாடியார் ஆட்சி, திமுக ஸ்டாலின் விக்கு வைத்து அறைக்குள் அமர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறார். மக்களுக்காக, வாஷிங் மிசன், அனைவருக்கும்வீடு, என்று பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். எடப்பாடியார் சொன்னால் செய்வார். அனைவரும் ஒற்றுமையாக இருந்து நமது வெற்றிக்காக பாடுபட்டு மீண்டும் தமிழகத்தில் அதிமுக அரசு அமைய இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *