விளவங்கோட்டில் விஜயதரணி மீண்டும் போட்டி.. காங்கிரஸ் கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை, மார்ச்-16

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டத்தில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் முதற்கட்டமாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கடந்த சனிக்கிழமை வெளியிட்டது.

சில தொகுதிகளில் வேட்பாளர்களை யார் நிறுத்துவது என்பதில் உட்கட்சி பூசல் இருந்து வந்ததால் மீதமுள்ள 4 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் நிலவி வந்தது.

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. விளவங்கோடு தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ ஆக உள்ள விஜயதரணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொளச்சல் தொகுதியில் பிரின்ஸ், மயிலாடுதுறையில் ராஜகுமார், வேளச்சேரியில் ஹசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேளச்சேரி – ஜே.எம்.ஹெச். ஹாசன்
மயிலாடுதுறை – எஸ். ராஜகுமார்
குளச்சல் – ஜே.ஜி. பிரின்ஸ்
விளவங்கோடு – எஸ். விஜயதரணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *