சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்

 நாகை.நவம்பர்.2

திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ய சிக்கல் சிங்கார வேலர் கோவிலில்  சக்தி வேல்வாங்கும் போது வேர்வை சிந்தும் அபூர்வ  நிகழ்வை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

   நாகப்பட்டிணம் மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் ஆலயம் புகழ்பெற்ற முருகன் ஆலயமாகும். சிக்கலில் வேல்வாங்கி செந்தூரில் சம்ஹாரம் செய்தான் முருகன் என்று கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ள வரலாறாகும். அதற்கேற்ப சிக்கல் ஆலயத்தின் சூரசம்ஹார விழா கடந்த 28ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது. முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளினார் பின்னர் இரவு ஆலயத்திற்குள் எழுந்தருளிய முருகன் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்தி வேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்றது.

 அப்போது முருகனின் சிலை முழுவதும் வியர்வைத்துளிகள் ஏற்பட்டதை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *