தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வேட்பு மனு தாக்கல்!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கோவை, மார்ச்-15

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி துவங்க உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 19ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த தேர்தலில் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த தேர்தலிலும் அதே தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார். தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அவர் இன்று பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.

முன்னதாக, கோவை தொண்டாமுத்தூரில் கோவை மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சந்தித்து, அதிமுகவில் இணைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *