வாரிசு அரசியல் செய்வதாக நினைத்தால் மக்கள் என்னை தோற்கடிக்கட்டும்.. உதயநிதி ஸ்டாலின்

தன்னை வாரிசு அரசியல் செய்வதாக நினைத்தால் மக்கள் நிராகரிக்கட்டும் என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, மார்ச்-15

சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இதனையடுத்து அவுர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்தால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று சட்டசபையில் கூறியது முதல்வர் பழனிச்சாமிதான். இப்போது, அதே அதிமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் செய்யாததையா, இனி அவர்கள் செய்யப் போகிறார்கள்?. எம்எல்ஏ பதவி என்பது நியமன உறுப்பினர் பதவி கிடையாது. மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கும் பதவி. என்னை வாரிசு அரசியல் செய்வதாக மக்கள் நினைத்தால் என்னை தோற்கடிக்கட்டும், அல்லது என்னை வெற்றி பெற வைக்கட்டும். முடிவு மக்கள் கையில் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *