எடப்பாடி தொகுதியில் 7-வது முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக முதலமைச்சர் பழனிசாமி ஆரவாரமில்லாமல் சாலையில் நடந்துவந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

எடப்பாடி, மார்ச்-15

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி முக்கிய அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் மற்றும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் போட்டியிடுகிறார். இதையடுத்து இன்று மதியம் எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் தனலிங்கத்திடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

1989ஆம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எடப்பாடி பழனிசாமி. 1991, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். இதுவரை சட்டப்பேரவை தேர்தலில் 6 முறை வெற்றிபெற்ற பழனிசாமி 2 முறை தோல்வியை தழுவியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *