கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டபேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இன்று பிற்பகல் 12.30 மணியளவில் அயனாவரம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சென்னை, மார்ச்-15

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. வேட்புமனு தாக்கலின் 2வது நாளான இன்று முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் உள்ள பழைய மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி எம்.தங்கவேலுவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னை- கொளத்தூர் தொகுதியில் 2011, 2016 தேர்தல்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 9 ஆவது முறையாகவும் ஸ்டாலின் போட்டியிடுகிறார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் 37,850 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகன் தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்.

அதே போல் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி டி.மோகன்ராஜ்ஜிடம் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

மேலும் திமுக உறுப்பினர்களும் அவரவர் தொகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *