அமமுக 4ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஆர்.கே.நகரில் காளிதாஸ் போட்டி..!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நான்காம்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை, மார்ச்-15

தமிழக சட்டமன்ற தேர்தலில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிட இருக்கிறது. தற்போது வரை அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 6 தொகுதிகளும், ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி மற்றும் மருதுசேனை சங்கம், விடுதலை தமிழ்ப்புலிகள், மக்களரசு கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக நேற்று அமமுக கூட்டணியில் இணைந்தது. அமமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அமமுக சார்பில் ஏற்கனவே 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டிருந்ததால் அந்த வேட்பாளர்களில் 40-க்கும் மேற்பட்டோரை திரும்பபெற முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், தேமுதிக உடனான தொகுதி பங்கீட்டிற்கு பின்னர் அமமுக நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இந்த 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் மொத்தம் 7 தொகுதிகளுக்கு அமமுக வேட்பாளர் பெயரை அறிவித்துள்ளது. வேட்பாளர் பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார். இதில் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.வாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் டாக்டர் காளிதாஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமமுக 4-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்,

ஆர்.கே.நகர் – டாக்டர் காளிதாஸ்

அரக்கோணம் – மணிகண்டன்

இராணிப்பேட்டை – வீரமணி

ஆற்காடு – ஜனார்த்தனன்

கீழ்பென்னாத்துர் – கார்த்திகேயன்

அம்பாசமுத்திரம் – ராணி ரஞ்சிதம்

நாங்குநேரி – பரமசிவ ஐயப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *