அம்மா வாஷிங் மெஷின், கல்விக் கடன் ரத்து, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை.. அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. “அம்மா இல்லம் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு, மகளிருக்கு இலவச பேருந்து சலுகை, அம்மா வாஷிங் மெஷின் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு 2ஜி டேட்டா இலவசம், ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும், முதியோர் உதவித்தொகை 1000 லிருந்து 2000 ஆக உயர்வு, கல்விக்கடன் தள்ளுபடி, வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி, விலையில்லா கேபிள் டிவி இணைப்பு, இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை உள்ளிட்ட அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
சென்னை, மார்ச்-14

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக அனைத்து குடும்பங்களுக்கும் அம்மா வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விலையில்லா கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படும். மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும், வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், ரேசன் பொருட்கள் வீடு தேடி வழங்கப்படும், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை, அம்மா இல்லம் திட்டத்தின்கீழ் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில் உள்ள முக்கிய வாக்குறுதிகள் வருமாறு:
- குடும்ப தலைவிகளுக்கு குல விளக்கு திட்டத்தின்கீழ் ரூ.1500, அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்
- அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சோலார் சமையல் அடுப்பு வழங்கப்படும்
- பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகை 2500 ரூபாய் வழங்கும் திட்டம் தொடரும்
- பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு ஒரு வருடமாக அதிகரிக்கப்படும்.
- அம்மா பசுமை வீடு திட்ட மானியம் ரூ.3.40 லட்சமாக உயர்த்தப்படும்
- மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்றப்படும்
- அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
- 9, 10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படும்
- மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட நடவடிக்கை
- நகர பேருந்துகளில் மகளிருக்கு 50 சதவீத கட்டண சலுகை
- வேலை இல்லாத இளைஞர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தெகை இரட்டிப்பாக்கப்படும்
- அமைப்பு சாரா ஓட்டுநர்களுக்கு விபத்து காப்பீடு வழங்கப்படும்
- காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்
- கரிசல், களிமண் எடுக்க தடையில்லா சான்று அளிக்கப்படும்
- பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்.
- பத்திரிகையாளர்களுக்கு குடியிருப்பு மனைகள் மற்றும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்
- 25000 ரூபாய் மானியத்தில் எம்ஜிஆர் பசுமை ஆட்டோ வழங்கப்படும்
- பழுதடைந்த அனைத்து மத ஆலயங்களும் புனரமைக்கப்படும்.
- மாவட்டந்தோறும் மினி ஐ.டி பார்க்.
இளைஞர்களுக்கு குறைந்தவட்டியுடன் தொழில்தொடங்க நிதியுதவித் திட்டம்
* அமைப்புசார தொழிலாளர்களுக்கு ரூ.10000 வட்டியில்லா கடன்
* ஏழை திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை இலவசமாக அரசே வழங்கும்
* கரிசல் மண் எடுக்க தடையில்லாமல் அனுமதி
* குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள்
* கோதாவரி – காவிரி இணைப்பு துரித நடவடிக்கை எடுக்கப்படும்
* கடல் சுற்றுலா பூங்காக்கள்
* வழக்கறிஞர்கள் சேம நல நிதி உயர்வு
* காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்
* தனியார் பங்களிப்புடன் தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு காலை டிபன் வழங்கப்படும்
* புற்றுநோய் சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
* அங்கன்வாடி குழந்தைகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் தினந்தோறும் 200 மி.லி பால்
* மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயர் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை
* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குத் தேவையான கடன் உதவி வழங்கப்படும்
* ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, ரூ.25,000 மானியத்தில் பசுமை ஆட்டோ திட்டம்
* கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்
* பொங்கல் பண்டிகை உதவித்தொகை தொடரும்
* சூரியசக்தி மின் ஆற்றல் திட்டங்களுக்கான மானியம் தொடரும்
* நெல், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்படும்
* தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு
* உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை
* நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கு இலவச நுழைவுத்தேர்வு பயிற்சி
* முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000ஆக உயர்த்தப்படும்
* நெசவாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்
* 9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் சத்துணவு நீட்டிப்பு
* இந்து ஆன்மிக பயண சலுகை உயர்த்தப்படும்
* தூய்மை பணியாளர் மதிப்பூதியம் ரூ.6 ஆயிரம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.