அமமுக கூட்டணியில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டி

சட்டப்பேரவை தேர்தலில் அமமுக கூட்டணியில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை திரும்ப பெறுவதாக அமமுக அறிவித்துள்ளது.

சென்னை, மார்ச்-14

அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை எனக்கூறி அங்கிருந்து விலகியது. இந்நிலையில், அமமுக – தேமுதிக இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அமமுக – தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கையெழுத்துடன் ஒப்பந்த கடிதத்தை பெற்று கொண்டார் தேமுதிக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன். இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் அமமுக கூட்டணியில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி, திருத்தணி, ஆவடி, வில்லிவாக்கம், திருவிக நகர் உள்ளிட்ட 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது.

  1. கும்மிடிப்பூண்டி (1)
  2. திருத்தணி (3)
  3. ஆவடி (6)
  4. வில்லிவாக்கம் (14)
  5. திரு.வி.க நகர் (தனி) (15)
  6. எழும்பூர் (தனி)(16)
  7. விருகம்பாக்கம் (22)
  8. சோழிங்கநல்லூர் (27)
  9. பல்லாவரம்(30)
  10. செய்யூர் (தனி) (34)
  11. மதுராந்தகம் (தனி) (34)
  12. கீழ்வைத்தனன் குப்பம் (தனி) (45)
  13. ஊத்தங்கரை (தனி) (51)
  14. வேப்பனஹள்ளி (54)
  15. பாலக்கோடு (57)
  16. பெண்ணாகரம் (58)
  17. செங்கம் (தனி) (62)
  18. கலசப்பாக்கம் (65)
  19. ஆரணி (67)
  20. மயிலம் (71)
  21. திண்டிவனம் (தனி) (72)
  22. வானூர் (தனி) (73)
  23. திருக்கோயிலூர் (76)
  24. கள்ளக்குறிச்சி (தனி) (80)
  25. ஏற்காடு (பழங்குடி ) (83)
  26. மேட்டூர் (85)
  27. சேலம் மேற்கு(88)
  28. நாமக்கல்(94)
    29 குமாரபாளையம் (97)
  29. பெருந்துறை(103)
  30. பவானிசாகர் (தனி) (107)
  31. கூடலூர் (தனி) (109)
  32. அவினாசி (தனி)(112)
  33. திருப்பூர் வடக்கு (113)
  34. வால்பாறை (தனி) (124)
  35. ஒட்டன்சத்திரம் (128)
  36. நிலக்கோட்டை (தனி) (130)
  37. கரூர் (135)
  38. கிருஷ்ணராயபுரம் (தனி) (136)
  39. மணப்பாறை (138)
  40. திருவெறும்பூர் (142)
  41. முசிறி (154)
  42. பெரம்பலூர் (தனி) (147)
  43. திட்டக்குடி (தனி)(151)
  44. விருத்தாச்சலம் (152)
  45. பண்ருட்டி (154)
  46. கடலூர் (155)
  47. கீழ்வேளூர் (தனி) (164)
  48. பேராவூரணி (177)
  49. புதுக்கோட்டை (180)
  50. சோழவந்தான் (தனி) (190)
  51. மதுரை மேற்கு (194)
  52. அருப்புக்கோட்டை (207)
  53. பரமக்குடி (தனி) (207)
  54. தூத்துக்குடி (214)
  55. ஓட்டப்பிடாரம் (தனி) (217)
  56. ஆலங்குளம் (223)
  57. ராதாபுரம் (228)
  58. குளச்சல் (231)
  59. விளவங்கோடு (233)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *