வெளியூர் வேட்பாளர், வெளியாட்கள் பிரச்சாரம் – S.P. வேலுமணி கிண்டல்

கோவை, மார்ச்-14

அதிமுக சார்பாக கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் தமிழக உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மீண்டும் போட்டியிடுகிறார். அதனை தொடர்ந்து கோவை மாவட்டம் கோவைபுதூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டதால், வேட்பாளர் அறிமுக கூட்டம், வெற்றிவிழா பொதுக்கூட்டமாக களைகட்டியது. இதில் கலந்து கொண்டு பேசிய தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் எஸ் பி வேலுமணி,

நாம் அனைவரும் மாமனாக, மச்சானாக, அண்ணனாக, தம்பியாக, குடும்பத்தில் ஒருவனாக என்னை நினைத்து எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
நாளை மதியம் 2 மணிக்கு உங்கள் ஆதரவோடு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். 2016 ல் தமிழகத்திலேயே அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச்செய்தவர்கள் இங்கு இருக்கின்றீர்கள். நான் சென்னையில் இருந்தாலும் எனக்காக இங்கே களப்பணி ஆற்றிவருகிறீர்கள். அது எனக்கு தெரியும், ஒவ்வொரு பகுதியிலிருந்தும் எனக்கு தகவல் அளித்து வருகிறீர்கள். பதவிகள் வரும், போகும், ஆனால் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வெற்றிக்காக பாடுபட வேண்டும், தொண்டாமுத்தூர் தொகுதியை பொருத்தவரை நீங்கள் ஒவ்வொருவரும் வேட்பாளர்கள்தான்.

எனது தந்தை கட்சியில் பல்வேறு தருணங்களில் பணியாற்றி, ஒருமுறை மட்டும் நகராட்சி தலைவராக, பதவி வகுத்து மறைந்தார். கோவை மாவட்டத்தில் எத்தனை, எத்தனை திட்டகளை, நிறைவேற்றியுள்ளோம், மேலும் ஒரு உதவியாளரைபோல், கோப்புகளை எடுத்து அதிகாரிகளை சந்தித்து ஒப்புதல் பெற்று அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம். நாம் வாக்களித்த மக்களை ஏமாற்றாமல் மனசாட்சியுடன் மக்களுக்காக, பணியாற்றியுள்ளோம், எதிர்கட்சியை பொருத்தவரை நாம் பேச விரும்பவில்லை, திமுகவில் கோவையில் ஆள் இல்லாமல் வெளியே எங்கேயோ இருந்து ஒருவரை அழைத்து வந்து வேட்பாளராக நிறுத்தியுள்ளார்கள். அதைபற்றி எனக்கு கவலை இல்லை, என்னை பொருத்தவரை நீங்கள் பார்த்துகொள்வீர்கள். ஆனால் திமுகவின் ஸ்டாலின், கோவையில் வெளியாட்களை கொண்டு பொய் பிரச்சாரங்களை மேற்கொள்வார்கள், அவர்களிடம் கவனமாக இருங்கள். நமது வெற்றி உறுதி செய்யப்பட்டது. நீங்கள் உள்ளீர்கள். இருந்தாலும் பொய் பிரச்சாரங்களை முறியடிக்க களத்தில் வெற்றிக்காக பாடுபட்டு, உதயசூரியனுக்கு, ஓட்டுக்கள் விழாமல் மக்களை நம்பக்கம், நமது சாதனைகளை எடுத்துக்கூறி இரட்டை இலைக்கு அவர்கள் ஓட்டுக்கள், விழச்செய்ய வேண்டும், திமுகவினருக்கு நன்றாக ஏமாற்றத்தெரியும், நமக்கு ஏமாற்றத்தெரியாது, நாம் நமது மக்களிடம் உண்மையை சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும்.

குடும்பத்திற்க்கு வருடத்திற்க்கு 6 சிலிண்டர், குடும்பத்தலைவிக்கு 1500 என்று எடப்பாடியார் தெரிவித்துள்ளார், அதுமட்டும் அல்லாமல், வங்கியில் 6 சவரன் தங்கம் வரை அடகுவைத்தவர்கள், கடன் தள்ளுபடி, 70 வருடமாக கோவை மாவட்டத்தில் இருந்த அவினாசி, அத்திக்கடவு திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக்காட்டியது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு என்பதை யாரும் மறுக்க முடியாது. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும்.

திமுகவில் அவரது குடும்ப உறுப்பினர்களை மட்டுமே முன்னிருத்தி தேர்தலை சந்திக்கிறார்கள், மேலும் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்று தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மேலும் இந்த விழாவில் தேமுதிக கோவை மாவட்ட பொருளாளர் சம்பத் அவர்கள் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரை வருக வருக என வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *