பத்மநாபபுரம் தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்தது அதிமுக.. குறிஞ்சிப்பாடி வேட்பாளர் மாற்றம்

குறிஞ்சிப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் பழனிசாமிக்கு பதிலாக செல்வி ராமஜெயம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பத்மநாபபுரம் அதிமுக வேட்பாளர் ஜான்தங்கம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மார்ச்-14

தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. 178 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் முதலில் 6 வேட்பாளர்களும், இரண்டாவது கட்டமாக 171 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். பத்மநாபபுரம் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதன்பின்னர் பத்மநாபபுரம் தொகுதிக்கான வேட்பாளர் பெயர் வெளியிடப்பட்டது. பத்மநாபபுரம் தொகுதியில் ஜான் தங்கம் போட்டியிடுவதாக ஓபிஎஸ்-இபிஎஸ் அறிவித்துள்ளனர்.

இதேபோல் குறிஞ்சிப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். பழனிசாமிக்கு பதிலாக செல்வி ராமஜெயம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *