விசிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. நாகையில் ஆளூர் ஷாநவாஸ் போட்டி

திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை, மார்ச்-14

தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து, வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

வானூர் – வன்னியரசு
செய்யூர் – பனையூர் பாபு
திருப்போரூர் – எஸ்.எஸ்.பாலாஜி
காட்டுமன்னார்கோயில் – சிந்தனைச் செல்வன்
நாகப்பட்டினம் – ஆளுர் ஷாநவாஸ்
அரக்கோணம் – கவுதம சன்னா

6 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *