வீதிகளில் குப்பை எப்படி? மாநகராட்சி தூதுவர்கள் நறுக் கேள்வி…

சென்னை, நவம்பர்-02

சுற்றுப்புறத்தூய்மை, சுகாதரத்தை வலியுறுத்தும் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவ தூதுவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

சுத்தமான சென்னை, சுகாதாரமான சென்னை என்ற முழக்கத்தை அடிப்படையாக கொண்டு சென்னையை தூய்மையாக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், சுற்றுப்புறத்தூய்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை மாநகராட்சியின் பள்ளி மாணவிகள் சுகாதார தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்த தூதுவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பிரச்சார வீடியோக்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. அதில், வீதிகளில் எவ்வாறு குப்பைகள் வந்தது? வீதிகளில் கிடக்கும் குப்பைகள் எல்லாம் நம் வீட்டில் இருந்து சென்றது தானே?  என மாணவிகள் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் சாட்டையடியாக உள்ளது.

சுத்தம் மற்றும் சுகாதாரமான சுற்றுப்புறத்தை உருவாக்க மாநகராட்சி தூதுவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்து வருகிறது. சமூக வலைதளங்களிலும் இந்த விழிப்புணர்வு பிரச்சார வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *