தி.மு.க. வால் தமிழகத்திற்கு பட்டையும் நாமமும் தான் கிடைத்தது-ஜெயக்குமார்

சென்னை, நவம்பர்-02

சென்னையில் செய்தியாளர்களிடம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: 10 ஆண்டுகளுக்கு மேல் திமுக மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த போது தமிழகத்திற்கு எந்த நல்ல திட்டங்களையும் செய்யவில்லை, திமுகவால் தமிழகத்திற்கு பட்டை நாமம் தான் கிடைத்தது.

பொள்ளாச்சி விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. தவறு செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தது அரசு. ஆனால் அதனை நீதிமன்றம் தான் ரத்து செய்துள்ளது. எனவே ஸ்டாலின் கேள்வி கேட்ட வேண்டியது நீதிமன்றத்தை தானே தவிர அரசை இல்லை.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறாது என்கிற துரைமுருகன் கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், வேலூர் தேர்தலில் தன் மகனை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று பணத்தை வாரி வழங்கியவர் அவர் என்றும், பணத்தை மட்டுமே திமுக நம்பியுள்ளது. ஆனால் அதிமுக மக்களை மட்டும் தான் நம்பி இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி. என்னுடைய நண்பர் ரஜினிகாந்த் இன்னும் பல விருதுகளை பெற வேண்டும் என வாழ்த்துவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *