திரிணாமூல் காங்கிரசில் இணைந்தார் யஷ்வந்த் சின்ஹா.. மம்தா மீது நடந்த தாக்குதலே கட்சியில் இணைய காரணம் என பேட்டி..!

பா.ஜ.கவின் மூத்த தலைவராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்த யஷ்வந்த் சின்ஹா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.

கொல்கத்தா, மார்ச்-13

Kolkata: West Bengal Panchayat and Rural Development Minister Subrata Mukherjee (L) hands over the party flag to former BJP leader Yashwant Sinha (R) after he joined Trinamool Congress Party ahead of West Bengal Assembly Elections, in Kolkata, Saturday, March 13, 2021. (PTI Photo)(PTI03_13_2021_000053A)

மேற்கு வங்க மாநிலத்தில், எட்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், எப்படியாது மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி, எம்.எல்.ஏக்கள், மூத்த தலைவர்கள் என பலரை குதிரை பேரத்தின் வாயிலாக விலைக்கு வாங்கி வருகிறது பா.ஜ.க. இரண்டு நாட்களுக்கு முன்பு கூட பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டது மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 2018ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.கவில் இருந்து வெளியேறிய யஷ்வந்த் சின்ஹா இன்று கொல்கத்தாவில், சுதிப் பானர்ஜி, டெர்ரிக் ஓ பிரையன், சுப்ரதா முகர்ஜி ஆகியோர் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

பின்னர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறித்து யஷ்வந்த் சின்ஹா செய்தியாளர்களிடம் பேசுகையில், “வாஜ்பாய் காலத்தில் பா.ஜ.கவின் கருத்தொற்றுமை மீது நம்பிக்கை இருந்தது. ஆனால், இன்றைய அரசு அதை அழிப்பதிலும், வெற்றி பெறுவதிலும் நம்பிக்கை கொண்டுள்ளது. பா.ஜ.க.வில் இருந்து அகாலிதளம், பிஜு ஜனதா தளம் வெளியேறி விட்டது. இன்று பா.ஜ.க.வுடன் யார் இருக்கிறார்கள்? நீதித்துறை உட்பட நாட்டின் நிறுவனங்கள் அனைத்தும் வலுவிழந்துவிட்டன. இது ஒரு அரசியல் மோதல் மட்டுமல்ல, ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான மோதலும் கூட. நந்திகிராமில் மம்தா பானர்ஜி மீது நடந்த தாக்குதலே திரிணாமுல் காங்கிரசில் நான் இணைவதற்கு அடிப்படையாக அமைந்தது” என தெரிவித்துள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா, வாஜ்பாய் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், சந்திரசேகர் அரசில் மத்திய நிதியமைச்சராகவும், பா.ஜ.கவின் தேசிய துணைத் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *