”படையப்பா இன்னும் சாதனை படையப்பா” ரஜினிக்கு தமிழிசை வாழ்த்து!!!

ஹைதராபாத், நவம்பர்-02

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் விருது அறிவிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்திற்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை ‘படையப்பா இன்னும் சாதனை படையப்பா’ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள 12 வெவ்வேறு மொழி திரைப்படங்களும் திரையிடப்பட இருக்கிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படும் என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

விருது வழங்கப்பட்ட செய்திக்கேட்டு ரஜினிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் தமிழக பாஜக தலைவர் தற்போதைய தெலங்கானா ஆளுநருமான தமிழிசை ரஜினிக்கு தனது வாழ்த்துகளை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு: “அபூர்வ ராகங்கள் தொடங்கி பேட்ட வரை சாதித்ததை வாழ்த்தி வாழ்நாள் சாதனையாளர் விருது. படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா என வாழ்த்துகிறேன்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *