தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ.33,840க்கு விற்பனை
சென்னை, மார்ச்-13

தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. கடந்த வாரங்களில் பவுன் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் வந்த நிலையில் விலை மீண்டும் உயர்ந்தும், குறைந்தும் வந்தது.
நேற்று முன்தினம் தங்கம் பவுன் மீண்டும் ரூ.34 ஆயிரத்தை தொட்டது. இதற்கிடையே நேற்று விலையில் அதிரடி சரிவு காணப்பட்டது. பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.33 ஆயிரத்து 440-க்கு விற்றது. இந்த அதிரடி சரிவால் தங்கம் விலை மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று விலை உயர்ந்தது.
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ.33 ஆயிரத்து 840-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 230 ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.700 உயர்ந்து ரூ.71 ஆயிரத்து 400 ஆக இருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.40-க்கு விற்கிறது.