புதுச்சேரியில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பாகூர் தவிர மற்ற 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, மார்ச்-13

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 30 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸும் – திமுகவும் கூட்டணி அமைத்து பல கட்டப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. கூட்டணிக்கு யாா் தலைமை தாங்குவது என்பது குறித்து பலகட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இந்நிலையில் திமுக – காங்கிரஸ் இடையே அண்ணா அறிவாலயத்தில் கடந்த வியாழக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினும், புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியனும் கையெழுத்திட்டனா்.

காங்கிரஸ் 15, திமுக 13, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்குத் தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டன.

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸும் கிட்டத்தட்ட சம அளவில் தொகுதிகளைப் பிரித்துக்கொண்டுள்ளன. அதிக இடங்களில் எந்தக் கட்சி வெற்றிபெறுகிறதோ அந்தக் கட்சியின் ஆட்சி அமைப்பது என்கிற முடிவுடன் திமுக – காங்கிரஸ் தோ்தலைச் சந்திக்கிறது.

புதுச்சேரியில் 13 தொகுதிகளில் திமுக போட்டியிடும் நிலையில் 12 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியானது.

புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்:

உருளையன்பேட்டை – எஸ்.கோபால்
உப்பளம் – அனிபால்கென்னடி
மங்கலம் – சண்குமரவேல்
முதலியார்பேட்டை – எல்.சம்பத்
வில்லியனூர் – சிவா
நெல்லித்தோப்பு – கார்த்திகேயன்
ராஜ்பவன் – சிவக்குமார்
மண்ணாடிப்பட்டு – கிருஷ்ணன்
காலாப்பட்டு – முத்துவேல்
திருப்புவனை (தனி) – முகிலன்
காரைக்கால் – நாஜிம்
நிரவி திருப்பட்டினம் – நாக தியாகராஜன்

திமுக போட்டியிடும் பாகூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *