வங்கி ஊழியர்கள் வரும் 15,16-ம் தேதிகளில் வேலை நிறுத்தம்

இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் வரும் 15,16-ம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

டெல்லி, மார்ச்-13

மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, இரண்டு பொதுத் துறை வங்கிகள் தனியாா்மயமாக்கப்படும் என்று நிதியமைச்சா் அறிவித்தாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை வங்கி ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் நடத்தினா். இதுதவிர, வரும் திங்கள், செவ்வாய் அன்று (மாா்ச் 15, 16-ம் தேதி) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவித்தது.

இதையடுத்து, மத்திய அரசு தொழிலாளா் துறை கூடுதல் தலைமை ஆணையா் எஸ்.சி.ஜோஷியுடன் வங்கி ஊழியா் சங்கங்கள் பேச்சுவாா்த்தை நடத்தின. இந்தப் பேச்சுவாா்த்தையின் போது, மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்தால், வேலை நிறுத்தத்தையும் மறுபரிசீலனை செய்வதாக ஊழியா் சங்கங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுதொடா்பாக அரசு தரப்பில் எவ்வித சாதகமான பதிலையும் தெரிவிக்காததால், ஏற்கனவே திட்டமிட்டப்படி 2 நாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியா் சங்கத்தின் பொதுச் செயலாளா் சி.எச்.வெங்கடாச்சலம் தெரிவித்து உள்ளாா்.

இதற்கிடையே, சனி (மாா்ச் 13) 2-வது சனிக்கிழமை மற்றும் ஞாயிறு (மாா்ச் 14) வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். எனவே, சனிக்கிழமை முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை தொடா்ந்து 4 நாள்களுக்கு வங்கிகள் செயல்படாது. இதனால், பணம், காசோலைப் பரிவா்த்தனைகள் உள்ளிட்ட அனைத்து விதமான வங்கிச்சேவைகளும் பாதிப்பு அடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதேவேளை, தனியாா் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *