பாபநாசம் தொகுதியில் ஜவாஹிருல்லா.. மமக வேட்பாளர்கள் அறிவிப்பு

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, மார்ச்-13

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் நடைபெற உள்ளது. அதில், திமுக கூட்டணியில் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி பாபநாசம் தொகுதியில் ஜவாஹிருல்லாவும், மணப்பாறை தொகுதியில் அப்துல் சமதும் போட்டியிடுகின்றனர்.
ம.ம.க. 2 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தில் தேர்தலை சந்திக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *