ஆகஸ்ட் 1ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு..!

மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறுகிறது.

டெல்லி, மார்ச்-13

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான நீட் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டில் நீட் நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

இதேபோல், 2021 ஆம் ஆண்டு முதல் பி.எஸ்சி நர்சிங், பி.எஸ்சி லைப் சைன்ஸஸ், ஆயுர் வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி மருத்துவ படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இந்த நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 11 மொழிகளில் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. முன்னதாக எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கு மட்டுமே நீட் தேர்வு நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது .

நாடு முழுவதும் 11 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறத் தொடங்கியதும், தேர்வுக்கான பாடத்திட்டம், வயது உள்ளிட்ட தகுதிகள், இட ஒதுக்கீடு, தேர்வு கட்டணம், தேர்வு நடைபெறும் நகரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களுடன் கூடிய விரிவான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தேர்வு முகமை கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *