இந்த ஆண்டு கோடை வெயில் வெளுத்து வாங்க போகுது..வானிலை மையம் அலர்ட்

இந்த ஆண்டு கோடை வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

டெல்லி, மார்ச்-13

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:-

மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம். இந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் வழக்கத்தைவிட அதிக அளவு வெயிலின் தாக்கம் இருக்கும்.வடக்கு, வடகிழக்கு, கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் பகல் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்.

சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் அதிகபட்ச வெப்பநிலை நிலவும் வாய்ப்பு உள்ளது.பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, கிழக்கு உ.பி., ஜார்க்கண்டில் மார்ச் முதல் மே வரையிலான காலகட்டத்தில் வழக்கமான வெப்பநிலையைவிட 0.5 டிகிரி செல்சியஸ் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் முதல் மே மாதம் வரை இந்த வெப்பம் நீடிக்கும்

என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *