தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல்.. எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மார்ச்-13

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்காக அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு, முதல் நாள் பரப்புரையை ஏற்காடு தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். வாழப்பாடியில் வேட்பாளர் சித்ராவை ஆதரித்தும், கெங்கவல்லி தொகுதிக்குட்பட்ட தம்பம்பட்டியில் வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்தும் முதல்வர் வாக்கு சேகரித்தார்.

ஆத்தூரில் அதிமுக வேட்பாளர் ஜெயசங்கரனுக்கு ஆதரவு திரட்டிய எடப்பாடி பழனிசாமி, திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது;-

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல் நாளில் இங்கு முதல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறேன்.

திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக அரசு மீது பல்வேறுகுற்றச்சாட்டுகளை கூறுகிறார். அவரை என்னுடன் நேருக்குநேர்விவாதம் நடத்த வரவேண்டும்என்று கூறியிருக்கிறேன். அதிமுகஅரசின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் கூறுகிறேன். திமுக ஆட்சியில் அவர்கள் செய்ததவறுகள் மீது வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அது குறித்து நேருக்கு நேர் விவாதத்தில் ஸ்டாலின் விளக்கமளிக்க முடியுமா?

அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை பொறுத்துக் கொள்ளமுடியாமல் ஸ்டாலின் பொய் பரப்புரை மேற்கொண்டு உள்ளார். எத்தனை பொய்களை கூறினாலும் தர்மம் வென்றதுதான் வரலாறு.

தமிழகத்தில் மாணவர்கள் நன்கு படிப்பதற்காக ரூ.7,337 கோடி செலவில் 52.31 லட்சம் மடிக்கணினிகள் அதிமுக அரசால் வழங்கப்பட்டுள்ளன. இதுபோலபல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் நிலம் இல்லாதவர்களுக்கு இரண்டுஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று திமுகவினர் கூறினார்களே அதை நிறைவேற்றினார்களா?

திமுக என்பது வாரிசு குடும்பமாக இருக்கிறது. கருணாநிதி அவருக்குப் பிறகு ஸ்டாலின் . இப்போது உதயநிதி என வாரிசு அரசியல் தொடர்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டாலின் பேசும்போது என் குடும்பத்தில் இருந்து எவரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று கூறினார். பொதுமக்களை ஏமாற்றி இப்போதுவாரிசு அரசியல் நடத்துகிறார்.

மக்கள் நிம்மதியாக வாழவேண்டும். மீண்டும் கட்டப்பஞ்சாயத்து, நிலம் அபகரிப்பு போன்ற பிரச்சினைகள் வரக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *