உள்ளாட்சித்தேர்தலில் திமுக வெற்றிபெறும்-துரைமுருகன் நம்பிக்கை

சென்னை, நவம்பர்-02

உள்ளாட்சித்தேர்தல் எப்போது வந்தாலும் திமுக தயராக இருப்பதாகவும், திமுகவே நிச்சயம் வெற்றிபெறும் எனவும் திமுக பொருளாளர் துரைமுருகன் நம்பிக்கை தெரிபித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் திமுக பொருளாளர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தொடர் தோல்விகளை சந்தித்துவந்த அதிமுக இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடுவதென்பது வெகு தொலைவில் இருந்து நடந்துவந்தவன் கலைப்பாறுவதற்கு விடும் பெருமூச்சு போல்தான். இது உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றியை தேடித்தராது. உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும் திமுக தயாராக உள்ளது நிச்சயம் திமுக வெற்றிபெரும். தேசிய கல்விக்கொள்ளையில் யாருக்கும் தெளிவு இல்லை. இது குறித்து விவாதிக்க தமிழக அரசு சட்டமன்றத்தை கூட்டியிருக்க வேண்டும், குறைந்த பட்சம் கல்வித்துறை அமைச்சராவது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்திருக்கவேண்டும். ஆனால் அதற்கு அரசு தயாராக இல்லை என குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *