அவசர அவசரமாக வேட்பு மனுத்தாக்கல் செய்த நயினார் நாகேந்திரன்.. பாஜக தலைமை அதிர்ச்சி..!

பாஜக தலைமை வேட்பாளர் பட்டியலை அறிவிக்காத நிலையில், திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

திருநெல்வேலி, மார்ச்-13

பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவ கிருஷ்ணமூர்த்தியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன் “ நல்ல நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ததாகவும், வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும்” என்றும் தெரிவித்தார்.

பாஜக தலைமை வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்பே நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது பாஜக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *