லால்குடி வேட்பாளரை வாபஸ் பெற்றது அதிமுக.. பெரம்பலூர், தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு

தமாகாவுக்கு லால்குடி தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிலும் தஞ்சை மற்றும் பெரம்பலூர் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சென்னை, மார்ச்-12

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்களை அறிவித்தவண்ணம் உள்ளன.

ஆளுங்கட்சியான அதிமுக முதற்கட்டமாக 6 வேட்பாளர்களையும், 2ம் கட்டமாக 171 வேட்பாளர்களையும் அறிவித்த நிலையில்,
3ஆம் கட்டமாக 2 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
பெரம்பலூர் (தனி) தொகுதியில் இளம்பை ரா.தமிழ்ச்செல்வனும், தஞ்சாவூர் தொகுதியில் அறிவுடைநம்பியும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லால்குடி தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக ராஜாராம் அறிவிக்கப்பட்டிருந்தார். அந்த தொகுதி இப்போது தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டதால், வேட்பாளர் ராஜாராம் வாபஸ் பெறப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

அதிமுக தரப்பில் பத்மநாதபுரம் தொகுதிக்கு மட்டும் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *