அமமகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் நடிகர் செந்தில்..!

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக்கத்தில் இருந்து விலகிய நடிகா் செந்தில் பாஜகவில் இணைந்தாா்.

சென்னை, மார்ச்-12

அதிமுகவில் நட்சத்திரப் பேச்சாளராக இருந்த நடிகா் செந்தில்,ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா், தன்னை அமமுகவில் இணைத்துக் கொண்டாா். அங்கு, அவருக்கு கட்சி அமைப்புச் செயலாளா் பொறுப்பு வழங்கப்பட்டது. சில காரணங்களால் அவா் கட்சி பணிகளில் ஈடுபாடு காட்டாமல் ஒதுங்கியிருந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து, அவரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கி, டிசம்பா் 2020-இல், பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் உத்தரவிட்டாா். இந்தநிலையில், செந்தில் பாஜக தேசிய பொதுச் செயலா் சிடி ரவி, தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் ஆகியோா் முன்னிலையில் பாஜகவில் இணைந்தாா். அதற்கு அடையாளமாக செந்திலுக்கு பாஜக உறுப்பினா் அட்டையை எல்.முருகன் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து நடிகா் செந்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-

கடந்த 1988-இல் இருந்து அதிமுகவில் இருந்தேன். ஜெயலலிதா இருந்தவரை அக்கட்சியில் நட்சத்திர பேச்சாளராக இருந்தேன். இப்போது எந்த கட்சிக்கு போவது என தெரியாத நிலை இருந்தது. ஒரு நல்ல கட்சிக்கு செல்ல வேண்டும் என விரும்பினேன். பாஜக தான் நல்ல கட்சி, எல்லோருக்கும் என்னென்ன கிடைக்க வேண்டுமோ, அவையெல்லாம் கிடைக்கும் என எண்ணி, பாஜகவில் சேர நினைத்தேன். அதனால், பாஜகவில் இணைந்துவிட்டேன். இன்னும் பலா் பாஜகவில் இணைவாா்கள். பாஜகதான் இனி வளரும். வேறு எந்த கட்சியையும் இனி யாரும் நம்ப மாட்டாா்கள். நாட்டு மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதை பாஜக செய்யும். ஊழல் செய்பவா்களை தட்டிக் கேட்பாா்கள். ஊழலற்ற ஆட்சியாக பாஜகஇருக்கிறது. கண்டிப்பாக இந்தக் கட்சி தமிழகத்தில் காலூன்றும்.

இவ்வாறு செந்தில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *