10 நாட்களில் அதிரடி 4 தீர்ப்புகளை வழங்கவிருக்கும் உச்சநீதிமன்றம்

புதுடெல்லி, நவம்பர்-02

இன்னும் சில நாட்களில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நான்கு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்க உள்ளது.

அயோத்தி ராமர் கோயில் – பாபர் மசூதி வழக்கு, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு, ரபேல் வழக்கில் மத்திய அரசு தவறு செய்யவில்லை என்று அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான வழக்கு மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவருவது பற்றிய வழக்கு என நான்கு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி 10 நாட்களுக்குள் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த வழக்குகளில் கொடுக்கப்படும் தீர்ப்பு இந்தியா முழுவதும் பெரும் தாக்கம் செலுத்துவதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *