விசிக 2 பொதுத் தொகுதி, 4 தனித் தொகுதிகளில் போட்டிடுவதாக அறிவிப்பு

திமுக கூட்டணியில் போட்டியிடவுள்ள விசிகவின் தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய இரண்டு பொதுத் தொகுதிகளிலும், வானூர், காட்டுமன்னார்கோவில், செய்யூர் மற்றும் அரக்கோணம் ஆகிய 4 தனித் தொகுதிகளிலும் விசிக போட்டியிடுகிறது.

சென்னை, மார்ச்-12

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது.இதில் திமுக கூட்டணியில் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், விசிக போட்டியிடும் 6 தொகுதிகளை திருமாவளவன் அறிவித்தார்.

6 தொகுதிகள் ;-

1.வானூர் (தனி)
2.அரக்கோணம் (தனி)
3.காட்டுமன்னார் கோயில் (தனி)
4.திருப்போரூர் (பொது)
5.நாகப்பட்டினம் (பொது)
6.செய்யூர் (தனி)

இதையடுத்து, விரைவில் வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *