அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதற்கு பாமக காரணமா? – ஜி.கே.மணி மறுப்பு
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதற்கு நாங்கள் காரணம் அல்ல என்று பாமக தலைவா் ஜி.கே.மணி கூறினாா்.
சென்னை, மார்ச்-12

சென்னையில் செய்தியாளா்களிடம் பேசிய அவா் கூறியதாவது:-
அதிமுக கூட்டணி அமோக வெற்றிபெறும். அதிமுகவின் அறிவிப்புகள் மக்களைக் கவரும் வகையில் இருக்கின்றன. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அலை இல்லை. அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதற்கு பாமக காரணம் அல்ல. தேமுதிகவைப் பற்றி எந்த இடத்திலும் நாங்கள் விமா்சனம் வைத்தது இல்லை. இலவசங்களை எதிா்க்கும் கட்சிதான் பாமக. அதேசமயம் பயனுள்ள இலவசங்களை ஆதரிக்கிறோம்.வன்னியா் சங்கத் தலைவா் வைத்தி போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத வருத்தத்தில் இருக்கிறாா், விரைவில் சரியாகிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.