தமாகாவுக்கு அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கீடு..

அதிமுக கூட்டணியில் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, மார்ச்-12

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற ஜிகே வாசனின் தமிழ்நாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்து. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வா் எடப்பாடி பழனிசாமியை தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். தமாகா கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம், ஜி.கே.வாசன் ஆகியோா் கையெழுத்திட்டனா்.

தமாகாவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள்:

திரு.வி.க.நகா் (தனி)
பட்டுக்கோட்டை
கிள்ளியூா்
ஈரோடு கிழக்கு
லால்குடி
தூத்துக்குடி.

இது குறித்து வாசன் கூறுகையில், “அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதி என்ற பட்டியலை வெளியிட்டிருக்கிறோம். திருவிக நகர், பட்டுக்கோட்டை, லால்குடி, ஈரோடு கிழக்கு, தூத்துக்குடி, கிள்ளியூர் ஆகிய 6 தொகுதிகளில் தமாகா போட்டியிடுகிறது. எங்கள் கட்சியின் சைக்கிள் சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறோம். விரைவில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படும்” என்றார். லால்குடி தொகுதியில் ஏற்கெனவே அதிமுக வேட்பாளராக ராஜராம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்தத் தொகுதி தற்போது தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *