திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியீடு

மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளின் அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார்.

சென்னை, மார்ச்-10

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ மதிமுக போட்டியிடும் தொகுதிகளை வெளியிட்டார்.

மதிமுக போட்டியிடும் தொகுதிகள்:

  1. மதுராந்தகம்
  2. சாத்தூர்
  3. பல்லடம்
  4. மதுரை தெற்கு
  5. வாசுதேவநல்லூர் (தனி)
  6. அரியலூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *