மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!
மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று வெளியிட்டார். அதில் மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் பொன்ராஜ் அண்ணாநகர் தொகுதியிலும், விருகம்பாக்கம் தொகுதியில் கவிஞர் சினேகனும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மார்ச்-10

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே ஆகிய கட்சியினர் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 154 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யமும், 40 தொகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சியும், 40 தொகுதிகளில் ஐஜேகே 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் முதல்கட்டமாக 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
மதுரவாயல் -பத்மப்ரியா
மாதவரம்- ரமேஷ் கொண்டசாமி
பெரம்பூர் பொன்னுசாமி
வில்லிவாக்கம் -சந்தோஷ் பாபு ஐஏஎஸ்
எழும்பூர்- பிரியதர்ஷினி
அண்ணாநகர்-பொன்ராஜ்
ஆர்.கே நகர்-பாசில்
தாம்பரம் -சிவ இளங்கோ
திருப்போரூர்- லாவண்யா
காஞ்சிபுரம்- கோபிநாத்
விருகம்பாக்கம்- சிநேகன்
உள்ளிட்ட 70 வேட்பாளர்களின் பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.