ரஜினிக்கும் டிடிவி நிலைதான்…

சென்னை, செப்டம்பர்-6

நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கினால் டிடிவி தினகரனுக்கு ஏற்பட்ட நிலைதான் அவருக்கும் ஏற்படும் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டு விரைவில் பொறுப்பேற்க உள்ளார், இதனால் அவர் வகித்து வந்த பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த தமிழக பாஜக தலைவராக ரஜினி நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்து வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ரஜினி தனிக்கட்சி தொடங்கினால், டிடிவி தினகரனுக்கு ஏற்பட்ட நிலைதான் அவருக்கும் ஏற்படும். டிடிவியும், கமல்ஹாசனும் நான் கூறிய 5 மற்றும் 7 சதவீத வாக்குகளையே பெற்றிருப்பதாக கூறினார். பொதுவாகவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பெரும்பாலானோர் கட்சி ஆரம்பிக்கை தொடங்கிவிட்டனர். தமிழகத்தில் எத்தனை கட்சிகள் வந்தாலும் அதிமுகவின் வாக்கு வங்கு ஒருபோதும் குறையாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

அதிமுக அனைத்து சாதி, மதத்தினருக்கான கட்சி. இதுதான் எங்களுடைய நிலைப்பாடு என்றும், ஓ.பி.ரவீந்திரநாத் கூறியது அவரின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் என்று ஜெயக்குமார் தெரிவித்தார். வரிசையாக திமுகவும், காங்கிரசும் திகார் ஜெயிலுக்கு சென்று தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டனர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் சாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *