தேமுதிகவுக்கு முரசு சின்னம் ஒதுக்கீடு

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

சென்னை, மார்ச்-10

தமிழகம், புதுச்சேரிக்கு அடுத்த மாதம் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதையடுத்து கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

தாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக தர மறுத்ததால் அதிருப்தியடைந்த தேமுதிக நேற்று அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது.
இதனையடுத்து, வருகிற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடலாமா? அமமுகவிடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாமா என்ற குழப்பத்தில் இருந்து வரும் நிலையில் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு முரசு சின்னம் ஒதுக்கியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *