நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல்.!

நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்தார்.

நந்திகிராம், மார்ச்-10

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க திராணாமுல் காங்கிரஸ் கட்சியும், எப்படியாவது மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என பாஜகவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் நந்திகிராம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, நான் எப்போதும் நந்திகிராமில்தான் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவேன். அந்த அளவுக்கு அது எனக்கு ராசியான தொகுதி. வரும் சட்டசபை தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட போகிறேன். முடிந்தால், தற்போது நான் எம்.எல்.ஏ.வாக இருக்கும் பவானிப்பூர் தொகுதியிலும் கூடுதலாக போட்டியிடுவேன் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, கடந்த மார்ச் 5-ம் தேதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியீட்டது. அதில்,பானர்ஜி நந்திகிராமில் இருந்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 2021 மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

நந்திகிராம் தொகுதி, கடந்த 2000-ம் ஆண்டுகளில், கம்யூனிஸ்டு ஆட்சிக்காலத்தில் நிலம் கையகப்படுத்தியதற்கு எதிராக நடந்த போராட்டங்களால் பிரபலமான தொகுதி ஆகும். அந்த போராட்டங்கள்தான், 2011-ம் ஆண்டில் மம்தா பானர்ஜி ஆட்சியை பிடிக்க உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் மேற்கு வங்க மாநிலம் நந்திகிராம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சுவேந்து அதிகாரி திராணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இந்நிலையில், 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் நந்திகிராம் தொகுதியில் பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *