ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!!!

புதுடில்லி, நவம்பர்-02

நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை பெருமைப்படுத்தும் விதமாக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் அறிவித்துள்ளார். கோவாவில் நவம்பர் 20 ம் தேதி துவங்கி நவம்பர் 28 வரை நடக்கும் 50வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Icon of Golden Jubliee என்ற பெயரில் ரஜினிக்கு, சினிமா துறைக்கான சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.

இது குறித்து பிரகாஷ் ஜவடேக்கர் கூறுகையில், இந்திய சினிமாத்துறையில் கடந்த பல வருடங்களாக முக்கிய பங்காற்றியவர் என்ற முறையில் ரஜினிக்கு இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். விருது அறிவிக்கப்பட்டதை ரஜினியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். திரைத்துறையினர் பலரும் ரஜினிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த், விருது அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *