மு.க. ஸ்டாலினின் 6வது கட்ட சுற்றுப்பயணம் ரத்து!

சென்னை, மார்ச்-10

தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. அந்தவகையில் இன்று திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரையில் மார்ச் 12 மற்றும் 13 தேதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள இருந்த நிலையில் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெறும் வகையிலான நிகழ்ச்சி மற்றும் தோ்தல் பிரசாரத்தை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாகச் சென்று நடத்தி வந்தாா்.

நாமக்கல் அருகே பொம்மைக்குட்டைமேடு பகுதியில் மாா்ச் 4-ஆம் தேதி நடைபெற இருந்த மு.க.ஸ்டாலின் பிரசாரம், தோ்தல் அறிவிப்பு காரணமாக 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்பு கூட்டணி பேச்சுவாா்த்தையால் அந்தத் தேதியும் ரத்து செய்யப்பட்டு 12-ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.

இந் நிலையில் வேட்பாளா் பட்டியல் வெளியீடு, தோ்தல் அறிக்கை வெளியீடு, தொகுதிகளில் சுற்றுப்பயணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்க வேண்டியிருப்பதால் நாமக்கல்லில் நடைபெற இருந்த தோ்தல் பயணம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *